Last Updated : 23 Jan, 2015 10:40 AM

 

Published : 23 Jan 2015 10:40 AM
Last Updated : 23 Jan 2015 10:40 AM

உ.பி.யில் கால்நடை உணவுப்பொருள் ஆய்வுக்கூடம்: ரூ.6.7 கோடி செலவில் ஜூன் முதல் செயல்படும்

கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை பரி சோதனை செய்வதற்காக ரூ.6.7 கோடியில் நிறுவப்பட்டு வரும் தேசிய உணவு ஆய்வுக் கூடம் வரும் ஜூன் மாதம் செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்த ஆய்வுக் கூடத்தை நிறுவ, மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் கடந்த 2013-ம் ஆண்டு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐசிஏஆர்) அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து அதன் கீழ் இயங்கும் அமைப்பான உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவிலுள்ள மத்திய ஆடுகள் ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூபாய் 6.7 கோடி செலவில் இந்த ஆய்வுக் கூடம் நிறுவப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது:

ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்நடை மற்றும் பறவை கள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய இந்த ஆய்வுக்கூடம் உதவும். தற்போது தனியார் நிறுவனங்களி டம் மட்டுமே இதுபோன்ற ஆய்வுக் கூடங்கள் உள்ளன. அரசு சார்பில் இந்த ஆய்வுக்கூடம் அமைவது இதுவே முதன்முறை.

இது இந்திய உணவுப் பொருட் கள் மற்றும் தர நிர்ணய ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படி செயல்படும். ஏற்றுமதிக்கான விலங்கு உணவுப் பொருட்களை பரிசோதனை செய்வதற்கு தேவையான உரமிச்ச பகுப்பாய்வு, எதிர் உயிர்மிச்சம், அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் விவரக் குறிப்பு பட்டியலிடல், தாது பகுப்பாய்வு போன்றவற்றுக்கான உயர்தர கருவிகள் இந்தக் கூடத்தில் உள்ளன. இதனால் விலங்கு உணவுப் பொருட்களின் சத்து விவரக் குறிப்பு பட்டியலிடல் இலகுவாகிறது.

இத்துடன் விலங்கு உணவுப் பொருட்களுக்கான தேசியக் குறிப்பு பரிசோதனைக் கூடமாகவும் இது செயல்படும். இங்கு புதிய உணவுப் பொருட்களுக்கான பரிசோதனைக் கூடங்கள் அமைக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்படும்.

தமிழக மக்கள் தாங்கள் உட் கொள்ளும் உணவுப் பொருட்களின் தரம், ஊட்டச்சத்து ஆகியவை குறித்து மிகவும் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருப்பதால் இத்தகைய பரிசோதனைக் கூடங்களுக்கு தேவை அதிகமாக இருக்கும்.

வரும் ஆண்டுகளில் இந்தியா வில் மனித ரத்தம்/நோயியல் பரிசோதனைக் கூடங்களைவிட உணவுப் பொருள் பரிசோதனைக் கூடங்கள் அதிகமான முக்கியத் துவம் பெறும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்த சோதனைக் களுக்கான கட்டணம் தனியார் நிறுவங்களைவிட மிகவும் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x