Last Updated : 02 Jan, 2015 08:07 PM

 

Published : 02 Jan 2015 08:07 PM
Last Updated : 02 Jan 2015 08:07 PM

50 லட்சம் ரசிகர்கள் பின்தொடர ட்விட்டரில் சச்சின், தோனியைக் கடந்த கோலி

டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலியின் ட்விட்டரை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 50 லட்சம். சச்சின், தோனி ஆகியோரை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையை கோலியின் ட்விட்டர் கணக்கு கடந்து சென்றது.

இதன் மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரானார் விராட் கோலி.

Kohli (@ImVkohli)-யின் ட்விட்டரைப் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை தற்போது, 5,004,544. சச்சின் டெண்டுல்கரை பின் தொடரும் ரசிகர்கள் 4,910,498. தோனியைப் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 3,374,509,

கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் சேர்ந்துள்ளனர்.

அக்டோபர், 2014-ல் 40 லட்சம் ரசிகர்கள் என்ற எண்ணிக்கையை எட்டினார் கோலி.

இது குறித்து தனது ட்விட்டரில் கோலி, “வாவ்! 5 மில்லியன் வாசகர்கள் வெகு விரைவில்! புத்தாண்டில் ஒரு அருமையான தொடக்கம். இதனைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

சேவாகிற்கு ட்விட்டரில் 3.2 மில்லியன்களுக்கும் அதிகமான ரசிகர்கள். யுவராஜ் சிங்குக்கு 2.7 மில்லியன். ரெய்னாவுக்கு 2.6 மில்லியன். ஜாகீர் கானுக்கு 1.7 மில்லியன். கவுதம் கம்பீருக்கு 1.65 மில்லியன். ரோஹித் சர்மாவுக்கு 1.62 மில்லியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x