Published : 06 Sep 2014 11:32 AM
Last Updated : 06 Sep 2014 11:32 AM

இன்று சர்வதேச கழுகுகள் தினம்

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் வனப்பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் உள்ளன. இவற்றில் பிணம் தின்னி கழுகுகள் மிக முக்கியமானது. இந்தியாவில் ஒன்பது வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன.

தமிழகத்தில் வெண் முதுகு பிணம் தின்னி, இந்தியன் பிணம் தின்னி, செந்தனை பிணம் தின்னி, எகிப்திய பிணம் தின்னி ஆகிய நான்கு வகை பறவைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் தற்போது எகிப்திய பிணம் தின்னியை தவிர மற்ற இனங்கள் அழிந்து வருகின்றன. ஒரு காலத்தில், தமிழகத்தில் பரவலாகக் காணப்பட்ட பிணம் தின்னி பறவை இனங்கள், தற்போது சத்தியமங்கலம், மோயார் ஆற்றுப்படுகை, ஊட்டி, முதுமலைக் காடுகளில் மட்டுமே அரிதாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 250 முதல் 300 வரை மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

‘டைகுளோபினாக்’ எனும் கால்நடை மருந்துதான், பிணம் தின்னி கழுகுகள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

‘டைகுளோபினாக்’ மருந்தை சாப்பிட்ட கால்நடைகள், இறந்தபின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடும். இந்த மருந்து 1990-ம் ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகப்படுத் தப்பட்டது.

எனவே, அந்த ஆண்டு முதல் இந்த கழுகுகள் இனம் அழியத் தொடங்கியது. இந்த பிணம் தின்னி கழுகுகளை பார்த்தால் ‘98432 11772’ என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x