Published : 08 Mar 2015 12:58 PM
Last Updated : 08 Mar 2015 12:58 PM

அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு: டாலர் மதிப்பு உயர்வு; தங்கம் விலை சரிவு

அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் விகிதம் 6.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது.

இதன் காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பு 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது.

ஒரு யூரோ 1.0839 டாலர் அளவுக்கு சரிந்தது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு இந்த நிலைமையில் இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 2,95,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 2,40,000 வேலை வாய்ப்புகள் தான் உருவாக்கப் படும் என்று கணிக்கப்பட்டிருந் தது. இதனால் வேலையில்லா தவர்களின் விகிதம் 5.5 சதவீதமாக சரிந்தது.

மந்த நிலையில் இருந்து அமெரிக்கா மீண்டு வருவதால் முதலீட்டாளர்கள் டாலர்களில் முதலீடு செய்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளின் முக்கிய கரன்ஸிகளுக்கு எதிராக டாலரின் மதிப்பு உயர்ந்தது.

தங்கம் விலை சரிவு

டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1168 டாலரில் வர்த்தகமாகிறது. இதனால் 10 கிராம் தங்கம் 520 ரூபாய் அளவுக்கு சரிந்தது. 10 கிராம் தங்கம் இப்போது 26,550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையிலும் வீழ்ச்சி இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் வரை சரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x