Published : 11 Mar 2015 09:30 AM
Last Updated : 11 Mar 2015 09:30 AM

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட இளைஞர் காங்கிரஸ் முயற்சி

மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறிய கருத்து களை கண்டித்து சென்னையி லுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட இளைஞர் காங் கிரஸ் உறுப்பினர்கள் நேற்று முயன்றனர்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி யளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, “கடற் படை சில சமயங்களில் அப்பாவி மீனவர்களையும் சுட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எங்கள் கடல் பகுதிக்குள் நீங்கள் ஏன் வருகிறீர்கள்? ஒருவர் என் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றால் நான் அவரை சுடலாம். சட்டம் அதை அனுமதிக்கிறது” என்று கூறினார். அவரது இந்தப் பேச்சு தமிழகம் முழுவதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இலங்கை பிரதமரின் இந்தப் பேச்சைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகை யிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித் திருந்தனர். இதற்காக நுங்கம் பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் அருகே ஏராளமான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று காலை 11 மணியளவில் திரண்டனர்.

இந்த முற்றுகைப் போராட் டத்தையொட்டி ஏராளமான காவலர்கள் முன்கூட்டியே குவிக்கப்பட்டிருந்தனர். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கள் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தூதரகத் துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸார், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக கோஷங் களை எழுப்பினர். ரணில் விக்கிரமசிங்கேவின் உருவ பொம்மையை அடித்தும் தங்களது கண்டனத்தை தெரி வித்தனர். இந்தப் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆபிரகாம் மணி, மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.குமார் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x