Published : 28 Mar 2015 09:28 am

Updated : 28 Mar 2015 09:29 am

 

Published : 28 Mar 2015 09:28 AM
Last Updated : 28 Mar 2015 09:29 AM

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி தாக்குதல்: நெல்லை முன்னாள் துணை மேயர் உட்பட 2 பேர் கைது

2

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சரமாரியாக அடித்து உதைத்தனர். இது தொடர்பாக திருநெல்வேலி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோபாலபுரம் பத்மாவதி தாயார் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 4 பேர் காரில் வந்தனர். அவர்கள் தன்ராஜிடம் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து உதைத்து அவரை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் நள்ளிரவில் ரத்தக் காயங்களுடன் தன்ராஜ் வீட்டுக்கு வந்தார்.

போலீஸார் தன்ராஜை அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து திருநெல்வேலி மாநகராட்சி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் (45) மற்றும் அயனாவரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காலில் விழச் சொல்லி அடி உதை

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், நிலம் வாங்கு வது தொடர்பாக தன்ராஜை அணுகி யுள்ளார். இதையடுத்து நிலம் வாங் கித் தருவதாக கூறி முத்துராமலிங்கத் திடம் இருந்து ரூ.12 லட்சத்தை தன்ராஜ் வாங்கினாராம். ஆனால் சொன்னபடி நிலம் வாங்கித் தராமலும், பணத்தை யும் திருப்பிக் கொடுக்காமலும் தன்ராஜ் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அதனால் பிரகாஷ் உள்ளிட்டோர் தன்ராஜை காரில் கடத்திக் கொண்டு, தி.நகரில் உள்ள முத்துராமலிங்கம் வீட்டுக்கு சென்று உள்ளனர். அங்கும் தன்ராஜை அடித்து உதைத்து முத்துராமலிங்கத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். பின்னர் தன்ராஜை விட்டுவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்காரில் கடத்தி தாக்குதல்முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம்2 பேர் கைது

You May Like

More From This Category

More From this Author