Published : 18 Mar 2015 10:28 AM
Last Updated : 18 Mar 2015 10:28 AM

இவரைத் தெரியுமா?- அஷூ சூயஷ்

$ தரச் சான்று நிறுவனமான கிரைசல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2015 ஜூன் மாதத்திலிருந்து இந்த பதவியில் செயல்பட உள்ளார்.

$ தற்போது எல்அண்ட்டி முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் எல்அண்ட்டி கேபிடல் மார்கெட் நிறுவனப் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

$ இவர் பொறுப்பு வகித்த இரண்டு வருடங்களில் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பை ரூ.22 ஆயிரம் கோடிக்கு கொண்டுவந்தார்.

$ பிடிலிட்டி அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் இந்தியப் பிரிவு தலைவராக இருந்தவர்.

$ சிட்டி குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். தொழில் மேம்பாட்டு பிரிவின் தலைவராகவும் இருந்தார்.

$ இந்திய நிதியியல் சேவை துறைகளில் 26 வருட அனுபவம் கொண்டவர்.

$ மும்பை பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டமும், இந்திய பட்டய கணக்காளர் பட்டமும் பெற்றவர்.

$ அசெட் மேனேஜ்மெண்ட் துறையில் ஆசிய அளவில் சக்தி வாய்ந்த 25 பெண்களுக்குள் இடம்பிடித்தவர். பார்ச்சூன் இந்தியா தேர்தெடுத்த இந்தியாவின் 50 பிசினஸ் பெண்கள் பட்டியலிலும் இடம் பிடித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x