Published : 05 Feb 2015 12:14 PM
Last Updated : 05 Feb 2015 12:14 PM

சேவைகளை விரிவுபடுத்தும் பேங்க் பஜார் இணையதளம்

நிதிச் சேவைகள் தொடர்பான பல்வேறு தகவல்களையும் ஒரிடத்தில் ஒருங்கிணைக்கும் பேங்க் பஜார் இணையதளம் தங்களது சேவைகளை விரிவுப்படுத்த போவதாக தெரிவித்தது.

வங்கி சேவைகள், மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விவரங்கள், காப்பீடு விண்ணப் பித்தல் உள்ளிட்ட பல சேவைகளை பேங்க் பஜார் இணையதளத்தில் மேம்படுத்தியுள்ளதாக கூறி யுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இதன் நிறுவனர் ரதி ராஜ்குமார் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 79 சதவீத வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவே தகவல்களை தேடுகின்றனர் என்றார். நிதிச் சேவைகளை இணையதளங்களில் ஆராய்ந்தே பின்னரே முடிவெடுக்கின்றனர் என்றார்.

மேலும் இந்தியாவில் முக்கிய 10 நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேபடி 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் நிதிச் சேவைகளை பயன்படுத்த இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

ஒரு தனிநபர் கடன் வாங்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே இணையதளங்களில் தேடத் தொடங்குகிறார் என அந்த சர்வே குறிப்பிடுகிறது என்றவர் எனவே இவர்களை இலக்காக வைத்து பேங்க் பஜார் இணையதளத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறோம் என்று குறிப்பிட்டார்.

இந்த இணையதளத்தின் மூலம் அனைத்து வங்கிகளின் டெபாசிட் வட்டி விவரங்கள், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்கள், கார் கடன், வீட்டுக்கடன் தொடர்பான தகவல்களை பெற முடியும். மேலும் வாகனக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்ற நிதிச் சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த நிதிச் சேவைகளை பல நிறுவனத்தின் திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதியையும் பேங்க் பஜார் இணையதளம் வழங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x