Published : 12 Feb 2015 10:00 am

Updated : 12 Feb 2015 10:00 am

 

Published : 12 Feb 2015 10:00 AM
Last Updated : 12 Feb 2015 10:00 AM

அரசு அலுவலகங்களில் ஜெ. படம்: திமுக எம்எல்ஏ தொடர்ந்த அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருப்பதை எதிர்த்து திமுக எம்எல்ஏ ராஜா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப் படம் அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களிலும் இடம்பெற் றிருப்பது குறித்தும், அதனை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி யும் அரசு தலைமைச் செயலாளர் உள்பட 49 பேருக்கு 10-11-2014 அன்று மனு கொடுத்தேன். இதுபோன்ற மனுவை திமுக வின் மற்றொரு எம்எல்ஏ ஜெ.அன் பழகன் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு 9-10-2014 அன்று வழங்கினார். இந்த மனுக் களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர்களின் புகைப்படம் அரசு அலுவலகங்களில் இடம்பெறுவது தொடர்பான அரசாணைகள் அடிப்படையில் அக்டோபர் 9-ம் தேதி வழங்கப்பட்ட மனுவை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் நீதிமன்ற உத்தரவுப்படி மனுவை பரிசீலிக்காததால், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் வேண்டுமென்றே நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளனர். இந்த குற்றத்துக்காக அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதி பதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்களில் முன்னாள் முதல் வரின் புகைப்படம் இடம்பெற் றிருப்பது குறித்த வழக்கில் முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இதே கோரிக் கைக்காக மதுரையில் தொடரப் பட்ட வழக்கில் கடந்த மாதம் 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கிலும் மனுதாரர் அதே நிவாரணத்தைத்தான் கோரு கிறார். அத்துடன் மனுதாரரின் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். எனவே, இவ்வழக்கை மறுபரி சீலனை செய்யத் தேவையில்லை என்பதால் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அரசு அலுவலகங்கள்திமுக எம்எல்ஏஅவமதிப்பு வழக்கு தள்ளுபடி

You May Like

More From This Category

More From this Author