Published : 24 Feb 2015 03:22 PM
Last Updated : 24 Feb 2015 03:22 PM

பெட்ரோலிய ஆய்வு உரிமம் காலாவதியாகிவிட்டது; மீத்தேன் திட்டம் குறித்த அச்சம் தேவையற்றது: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பெட்ரோலிய ஆய்வு உரிமம் காலாவதியாகிவிட்டதால், மீத்தேன் வாயு திட்டம் பற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

தஞ்சாவூர், திருவாரூர் மாவட் டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு திட்டம் பற்றி உறுப்பினர்கள் சிலர் கவலை தெரிவித்துப் பேசினர். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய திமுகவும் அதுகுறித்து பேசியதுதான். தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள நிலக்கரி படுகை மீத்தேன் வாயு பகுதியை ஆய்வுசெய்து உற்பத்தி செய்வதற்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு 2010-ம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் ஆய்வு மற்றும் உற்பத்தியை தொடங்குவதற்கு வசதியாக பெட்ரோலியம் ஆய்வு உரி

மத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட் டுக்கொண்டது. திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 50 கிராமங்களை உள்ளடக்கிய 691 சதுர கி.மீ. நிலக்கரி படுகை மீத்தேன் வாயு பகுதியில்

ஆய்வு உரிமம் கோரி தமிழக அரசிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்தது.

அதைப் பரிசீலித்த அப்போ தைய திமுக அரசு, 4 ஆண்டு களுக்கான பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வழங்கியது. திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தியது. அந்த ஒப்பந்தத்தில், ‘மீ்த்தேன் திட்டத்துக்கு தேவை

யான உரிமங்களை பல்வேறு துறைகளில் இருந்து பெறுவதற் கும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கும், குழாய்கள் பதிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அனுமதி அளித்திருந்தாலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து

ஆய்வுப் பணிகளை தொடங்கு வதற்கான அனுமதியை தமிழக மாசுகட்டுப்பாடு வாரியம் வழங்க வில்லை. ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பெட்ரோலியம் ஆய்வு உரிமம் கடந்த டிசம்பர் 31-ம் தேதி காலாவதியாகிவிட்டது.

மீத்தேன் வாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஜெயலலிதா ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையைப் பெறும்வரை ஈஸ்டர்ன் நிறு வனம் எந்தப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டார். இந்தக் குழு விரைவில் அறிக்கையை சமர்ப் பிக்கும்.

எனவே, மீத்தேன் திட்டம் குறித்து யாரும் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. அந்த திட்டத்தை நிறுத்தி ஜெயலலிதா உத்தரவிட்ட நிலையிலும், பெட்ரோலிய ஆய்வு உரிமம் காலாவதியாகிவிட்ட நிலையிலும் அதைப்பற்றி கவலை தெரிவிப்பது செத்த பாம்பை அடிப்பது போலத்தான்.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x