Published : 16 Feb 2015 10:35 AM
Last Updated : 16 Feb 2015 10:35 AM

பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிப்பு

சேலம் எருமாபாளையத்தில் நேற்று இரவு பாமக அரசியல் மாநாடு நடைபெற்றது. பொதுக்குழு கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அன்புமணி பேசியதாவது:

வரும் 2016 சட்டமன்றத் தேர்த லில் பாமக முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவோம். சேவை பெறும் உரிமைச் சட்டம், அனைவருக்கும் இலவச கல்வி, ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கை, ஒரு நிமிடம்கூட மின் நிறுத்தம் இல்லாத நிலையை உருவாக்குவோம்.

தமிழக பட்ஜெட்டில் 40 சதவீதம் இலவச திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகிறது. இதனால் ரூ.15 ஆயிரம் கோடி கடனுக்கு வட்டியாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் மின் உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருக்கும். தற்போதைய தமிழக முதல்வர் செயல்படாத முதல்வராக உள்ளார்.

இவ்வாறு அன்புமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x