Published : 30 Jan 2015 09:52 AM
Last Updated : 30 Jan 2015 09:52 AM

ஆழ்துளை கிணற்றின் குழாயில் திருட்டு இணைப்புகள்? - செங்கல்பட்டில் குடிநீர் தட்டுப்பாடு: கவுன்சிலர்கள் மீது பொதுமக்கள் புகார்

செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பழவேலி ஆழ்துளை கிணற்றின் முதன்மை குழாயிலி ருந்து திருட்டு இணைப்புகள் பெறப்படுவதால், நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் செயற்கை யான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கவுன்சிலர்களின் உதவியுடன் இத்தகைய திருட்டு இணைப்புகள் வழங்கப் படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ள செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம், பழவேலி மற்றும் திம்மாவரம் ஆகிய இடங்களில் உள்ள பாலாற்று பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து, மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இதில், பழவேலி பகுதியில் அமைக் கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற் றின் மூலம், 16 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

மலை மீது அமைந்துள்ள தட்டான்மலை பகுதிக்கும், பழவேலி ஆழ்துளை கிணற்றி லிருந்து எடுக்கப்படும் குடிநீரை விநியோகம் செய்வதற்காக நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக் கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆழ்துளை கிணற்றின் நேரடி குடிநீர் குழாயிலிருந்து, 7,8,10 மற்றும் 5 ஆகிய வார்டு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு இணைப்புகள் வழங் கப்பட்டுள்ளதாக புகார் எழுந் துள்ளது. அப்பகுதி கவுன் சிலர்களின் உதவியோடு இவை வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஆழ்துளை கிணற்றின் முதன்மை குழாயிலிருந்து, குடி யிருப்புகளுக்கான குழாய் இணைப்பு வழங்குவது சட்டவிரோதம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதை நகரவாசிகள் சுட்டிக் காட்டு கின்றனர். இதனால், தட்டான்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு நகரவாசிகள் கூறியதாவது: நகர மன்ற கவுன்சிலர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் வசதி கிடைக்கும் வகையில், திருட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், அவர்களது வார்டுகளுக்கு உட்பட்ட மற்ற பகுதியிலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆணையர் பதவியும் காலியாக உள்ளதால், யாரிடம் முறையிடுவதென தெரியவில்லை என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு 26-வது வார்டு அதிமுக கவுன்சிலர் முரளி கூறியதாவது: திருட்டு குழாய் இணைப்புகளை வழங்கியவர்கள் யாராக இருந் தாலும், அந்த செயல் தவறு தான். செங்கல்பட்டு நகராட்சியில் இதுபோன்ற திருட்டு இணைப்பு கள் அனைத்து பகுதிகளிலும் ஏராளமாக உள்ளன. இதனால், செயற்கையான குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து இத்தகைய இணைப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

இதுகுறித்து, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் கூறியதாவது: முதன்மை குழாயில் வழங்கப்பட்டுள்ள திருட்டு குழாய் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப் படும். வரும் 15-ம் தேதிக்குள் நகரப் பகுதியில் உள்ள திருட்டு குழாய் இணைப்புகளை, சம்பந்தப் பட்ட நபர்களே துண்டித்துக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x