Published : 08 Jan 2015 11:23 AM
Last Updated : 08 Jan 2015 11:23 AM
2009-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 50 டாலருக்கு கீழே சரிந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் பிரென்ட் கச்சா எண்ணெய் 50 டாலருக்கு கீழ் சரிவது இப்போதுதான். நேற்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு பீப்பாய் 49.92 டாலர் வரை சரிந்தது.
உற்பத்தி இதே அளவில் இருப்பதாலும் தேவையில் எந்த பெரிய மாற்றமும் இல்லாதால் இந்த சரிவு மேலும் தொடரும் என்றே பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது போல தெரியவில்லை. அதனால் ஒரு பீப்பாய் 40 டாலருக்கு கூட செல்லும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் மேலும் சரிந்து 20 டாலருக்கு வந்தால் கூட ஆச்சரியப்பட ஏதும் இல்லை என்று பேங்க் ஆப் ஜப்பான் முன்னாள் இயக்குநர் தெரிவித்தார். தற்போது ஒரு நாளைக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் பீப்பாய் வரை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒபெக் நாடுகளும் உற்பத்தியை குறைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. -ராய்ட்டர்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT