Last Updated : 03 Jan, 2015 01:06 PM

 

Published : 03 Jan 2015 01:06 PM
Last Updated : 03 Jan 2015 01:06 PM

நிதி ஒதுக்கீடு, அதிகாரிகள் அனுமதி தருவதில் தாமதம் உட்பட அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எதிரான தடைகள் களையப்படும்; விஞ்ஞானிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு உள்ள தடைகளை நீக்குவேன். நிதி ஒதுக்கீடு, அதிகாரிகளின் அனுமதி கிடைப்பதில் தாமதம் போன்றவை இனி இருக்காது. அதற்கேற்ப, பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்படும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் 102-வது தேசிய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் நடைபெறும் 5 நாள் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசிய தாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு அறி வியல் தொழில்நுட்பம்தான் உதவும் என்பதை முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு உணர்ந்து அதற்கேற்ப திட்டங்கள் கொண்டு வந்தார். அதன்படி நாட்டில் கிடைத்த சொற்ப ஆதாரங்களை வைத்து நமது விஞ்ஞானிகள் பல சிறந்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்கினர். புதிய ஆராய்ச்சி களைத் தொடங்கினர். அவை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து நமக்கு உதவி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ‘மங்கல் யான்’ செயற்கைக்கோளை நமது விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி முதல் முயற்சியிலேயே சாதனை படைத்தனர். அதேபோல் ஹுத் ஹுத் புயலின்போது செயற்கைக் கோள் மூலம் துல்லியமான தகவல்களை விஞ்ஞானிகள் அளித்து, ஆயிரக்கணக்கான உயிர் களைக் காப்பாற்றினர்.

வர்த்தகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் நாட்டில் ஆராய்ச்சி களையும் பெருக்க வேண்டும். அதற்குள்ள தடைகளை நிச்சயம் போக்குவேன். நமது பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், புதிய கண்டு பிடிப்புகளைக் கொண்டு வரவும் அவை சுதந்திரமாக செயல்படுவது முக்கியம். தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வழிவகை செய்யப்படும். நமது விஞ்ஞானிகளும் பல்கலைக்கழகங் களில் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தைக் கற்றுத்தரவும், அவர்களை வழிநடத்தவும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச் சிக்கு இணையதள தொடர்பு அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அறிவியல் மீது குழந்தை களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அறிவியல் மீது காதல் வரும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவேண்டும். அறிவியல், தொழில் நுட்பம், புதிய கண்டு பிடிப்புகளுக்கு நமது நாடு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆராய்ச்சிகளுக்கு நிதி கிடைக்கும் விஷயத்தில் பல தடைகள் இருப்பதாக விஞ் ஞானிகள் வருத்தம் தெரிவிக் கின்றனர். அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைப்பது, தேவை யற்ற சட்டதிட்டங்களால் நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படு கிறது. அந்தத் தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஞ்ஞானிகளுக்கு உறுதி அளிக்கிறேன். அறிவியலில் உள்ள மர்மங்களை கண்டுபிடித்து உலகுக்கு அளிக்க விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனம் செலுத்த வேண்டும். அரசு தரப்பில் உள்ள தடைகள், விதிமுறைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள் கிறேன். உங்களுக்கு ஆதரவு தர என்னை விட வேறும் யாரும் சிறந்தவர்களாக இருக்க முடியாது.

குழந்தைகளிடத்தில் தொழில் நுட்ப அறிவை வளர்க்க வேண்டும். நமது விஞ்ஞானிகளுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கு இணைய தளத்தை குழந்தைகளும் இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனித வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியும் அறிவியல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவை. உலகில் 2-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. அதேபோல் அறிவியல் தொழில்நுட்பத்திலும் 2-வது இடத்தில் சீனா உள்ளது. அதுபோல் நாட்டின் வளர்ச்சியைச் சிந்திக்கும்போது ஆராய்ச்சிகளும் பெருக வேண்டும்.

இந்தியாவுக்கு சவாலான நேரம் வந்த போதெல்லாம் நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டி உள்ளனர். இந்தியாவுக்கு உதவிகள் செய்ய மற்ற நாடுகள் மறுத்த போதெல்லாம், உள்நாட்டிலேயே நமது விஞ்ஞானிகள் பல கண்டு பிடிப்புகளை வெளிக் கொணர்ந்து சாதனைப் படைத்தனர். அதே நேரத்தில், இந்தியாவின் உதவியை மற்ற நாடுகள் கேட்டபோது, தயங்காமல் நமது விஞ்ஞானிகள் செய்தனர். அதுதான் நமது நாட்டின் கலாச்சாரம்.

இந்தியாவில் வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு, நோய் ஒழிப்பு ஆகிய முக்கிய விஷயங் களில் விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானது. அறிவியல் தொழில் நுட்பத்தால் நாடுகளுக்கு இடையே யான தடைகளை தகர்த்தெறிய முடியும். உலகை ஒன்றிணைக்க முடியும். உலகில் உள்ள சவால் களை ஒன்று சேர்ந்து சந்திக்க முடியும். அதேநேரத்தில் சமநிலை யற்ற தன்மையையும் அறிவியல் தொழில்நுட்பத்தால் உருவாக்க முடியும். போர்களை மிக கடுமை யாக நடத்தவும், சுற்றுச்சூழலுக்கு சேதத்தை உருவாக்கவும் முடியும். ஆனால், இந்திய அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மனித மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதே நமது நோக்கம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x