Last Updated : 27 Jan, 2015 10:29 AM

 

Published : 27 Jan 2015 10:29 AM
Last Updated : 27 Jan 2015 10:29 AM

அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்

இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள், அந்தந்த நாடுகளில் மூவர்ணக் கொடியேற்றி 66வது குடியரசு தின விழாவைக் கொண்டாடினர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மூவர்ண கொடியை இந்தியத் தூதர் ஜெய்சங்கர் ஏற்றிவைத்து உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சீனாவுக்கான இந்தியத் தூதர் அஷோக் கே.கந்தா, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அப்போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.

பின்னர் அவர் உரையாற்றும் போது, "நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு சீனாவுடன் உறவை வளர்க்கவே இந்தியா விரும்பியது. அதுதொடர்பாக சீனாவும் அணுகப்பட்டது. அதை சீனாவும் ஏற்றுக்கொண்டது. இந்த இருநாட்டு உறவு பரஸ்பரம் இருநாடுகளுக்கும் பயனளிக்கும்" என்றார்.

மேலும் அவர், "இன்னும் சில வாரங்களில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீனாவுக்குச் செல்கிறார். பின்னர், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உறவு மேம்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இந்த இரண்டு நாடுகளும் அரசியல், ராணுவம், பொருளா தாரம் மற்றும் கலாச்சார ரீதியில் சம பலத்தைக் கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அவர், 'ஸ்மார்ட் சிட்டீஸ்', விண்வெளி ஆய்வு, கலாச்சார பரிமாற்றம், சுற்றுலா வளர்ச்சி ஆகிய துறைகளில் சீனர் களுடன் ஒப்பந்தம் கையெழுத் தாக உள்ளன என்றார். பாங்காக் கில், தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தர் ஷிரிங்லா இந்தியத் தூதர‌க அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் குடியரசு தலைவரின் செய்தியை அவர் வாசித்தார்.

இலங்கை தலைநகர் கொழும் பில் உள்ள இந்தியத் தூதரகத் தில் மூவர்ண கொடியை இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா ஏற்றினார். அப்போது பேசிய அவர், இலங்கையின் புதிய அரசுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x