Last Updated : 28 Jan, 2015 11:07 AM

 

Published : 28 Jan 2015 11:07 AM
Last Updated : 28 Jan 2015 11:07 AM

ஆர்.கே.லக் ஷ்மண் உடல் தகனம்: நினைவிடம் அமைக்கிறது மகாராஷ்டிர அரசு

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக் ஷ்மண் உடல் புணேவில் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக் ஷ்மண் (94) சிறுநீரக பாதிப்பு காரணமாக புணேவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக புணேவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந் தது. ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதைத் தொடர்ந்து நேற்று மாலை லக் ஷ்மணின் உடல் அரசு மரியாதையுடன் புணேவில் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் நிவாஸ் இறுதிச்சடங்குளை செய்தார்.

முன்னதாக மகாராஷ்டிர முதல்வர் தேவந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் ஆர்.கே. லக் ஷ்மண் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறிய போது, ‘‘உலகம் இருக்கும்வரை ஆர்.கே.லக் ஷ்மணின் ‘திருவாளர் பொதுஜனம்’ கார்ட்டூன் நிலைத் திருக்கும், அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும்’’ என்று தெரி வித்தார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியபோது, ‘‘எனது தந்தை பால்தாக்கரேவும் ஆர்.கே.லக் ஷ்மணும் ஒன்றாக பணி யாற்றியவர்கள்’’ என்று தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x