Published : 24 Jan 2015 11:30 AM
Last Updated : 24 Jan 2015 11:30 AM

‘குருஷேத்ரா’ தொழில்நுட்ப விழா ஜன.28-ல் தொடக்கம்

பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்ப திறமையையும், படைப்பாற்றலையும் வெளிக் கொண்டு வரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி கடந்த 8 ஆண்டுகளாக ‘குரு ஷேத்ரா’ எனப்படும் தொழில்நுட்ப விழாவை நடத்தி வருகிறது.

9-வது குருஷேத்ரா தொழில்நுட்ப விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் வருகிற 28-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உருவாக்கி யுள்ள ரயில் தண்டவாளங்களில் உள்ள தேவையில்லாத பொருட் களை கண்டறியும் கருவி உட்பட 260 கண்டுபிடிப்புகள் இந்த தொழில் நுட்ப விழாவில் இடம்பெறுகின்றன. சிறந்த கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். விழாவில் கலந்துகொள்ள இதுவரை 13 ஆயிரம் மாணவ-மாணவிகள் முன் பதிவு செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், டீன் நாராயணசாமி ஆகியோர் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x