Last Updated : 29 Jan, 2015 04:41 PM

 

Published : 29 Jan 2015 04:41 PM
Last Updated : 29 Jan 2015 04:41 PM

இந்தியாவுக்கு மட்டும் இரண்டு முறையா?- ஒபாமாவை முன்வைத்து பாக். பஞ்சாப் கவர்னர் ராஜினாமா

'தென்னை மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெறி கட்டிச்சாம்' என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. அந்த வகையில் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகை தந்ததையடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னர் முகமது சர்வார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் முறையாக இந்தியா வந்தார். தற்போது மீண்டும் அவர் இந்தியா வந்து சென்றுள்ளார். 5 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஒரு நாட்டுக்கு இரண்டு முறை வந்திருக்கிறார் என்றால் அந்நாடு அமெரிக்காவுடனான உறவை எவ்வளவு திறம்பட மேம்படுத்தியுள்ளது என்பதே ராஜினாமா செய்த அந்த கவர்னரின் ஆதங்கம்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளதோடு நவாஸ் ஷெரீப் ஆட்சியை வெகுவாக விமர்சித்துள்ளார். ராஜதந்திர நடவடிக்கைகளில் நவாஸ் ஷெரீப் அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதா முகமது சர்வார் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒபாமாவின் இந்தியப் பயணம் பாகிஸ்தான் அரசுக்கு கிடைத்துள்ள தோல்வி. அதுவும் இரண்டாவது முறையாக ஒபாமா இந்தியா வந்து சென்றது பாகிஸ்தான் அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த மிகப் பெரிய பின்னடைவு.

அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டது.

அதேவேளையில், அமெரிக்க அதிபரும் இந்தியா - பாகிஸ்தானை சமமாக நடத்த தவறிவிட்டார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையிலாவது ஒபாமா பாகிஸ்தானுக்கும் வந்திருக்கலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x