Last Updated : 08 Oct, 2014 04:04 PM

 

Published : 08 Oct 2014 04:04 PM
Last Updated : 08 Oct 2014 04:04 PM

மகாராஷ்டிரா மீதான கவனத்தை பாக். மீது திருப்புங்கள்: பிரதமருக்கு சிவசேனா அறிவுரை

மகாராஷ்டிரத் தேர்தலில் செலுத்தும் கவனத்தை, எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் மீது பிரதமர் நரேந்திர மோடி காட்ட வேண்டும் என்று சிவசேனா அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு 15-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. அந்த மாநிலத்தில் தங்களது 25 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனாவும் பாஜக-வும் தனித்தனியே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாஜக-வுக்கு ஆதரவான பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரத்தை சிவசேனா விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனா அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், "பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் எல்லையில் தொடர் அத்துமீறல்கள் நடக்கின்றன. ஆனால் பிரதமரோ மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சியை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்.

பாகிஸ்தான் ஒரிரு முறை அல்லாமல் தொடர்ந்து எல்லையில் வேண்டுமென்ற தாக்குதல் நடத்துகிறது. ஆனால் அதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதில் தரவில்லை. காரணம் மத்திய அரசு அதற்கான உத்தரவை வழங்கவில்லை.

நமது மகாராஷ்டிர பிரச்சினையை பிறகு தீர்த்துக்கொள்ளலாம், பிரதமர் மோடி தற்போது கவனம் செலுத்த வேண்டியது எல்லைப் பிரச்சினையில் தான். இந்தியர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு அளிக்கும் பக்கத்து நாட்டுக் காரர்களுக்கு பதலடி கொடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x