Published : 07 Oct 2014 03:16 PM
Last Updated : 07 Oct 2014 03:16 PM

தீபாவளிக்கு புதிய வகை ‘பனோரமா 500’ பட்டாசு அறிமுகம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து தமிழகத்தில் தற்போது பட்டாசு விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக ‘பனோரமா 500’ என்னும் புதிய ரக பட்டாசு அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விபத்து ஏற்படுவதை தடுக்க சென்னையில் சமீப காலமாக தீவுத்திடல் மைதானத்தில் பட்டாசு விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு கண்காட்சிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சமீபத்தில்தான் டெண்டர்விடுத்திருந்தது.

இதன்படி அக்டோபர் 3-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பட்டாசு கண்காட்சி நடக்கவுள்ளது. இது தவிர சென்னை பாரிமுனையில் உள்ள பந்தர் தெருவிலும் பட்டாசு மொத்தமாகவும் சில்லறை யாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பட்டாசு தயாரிப்பாளர் கள் ஆண்டுதோறும் பல்வேறு வகையான புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை பாரி முனை பந்தர் தெருவில் பட்டாசுக் கடை நடத்திவரும் சையத் சுல்தான் கூறியதாவது: தீபாவளிக்கான பட்டாசு விற்பனை வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு செப்டம்பர் மாதத்தின் மத்தியிலேயே பட்டாசு வியாபாரத்தை தொடங்கி விட்டோம். இந்த ஆண்டும் நிறைய புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

‘பனோரமா 500 ஷாட்’ என்னும் புது ரக பட்டாசு இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 500 முறை கீழிருந்து மேலே சென்று வண்ண வண்ணமாக வெடிக்கும். இந்த ரக பட்டாசு ஒரு பெட்டி ரூ.8000 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர ஆட்டம் பாம்கள், எலெக்ட்ரிக் பட்டாசுகள், ராக்கெட் கள் என பல்வேறு வகையான பட்டாசு பேக்கேஜ்கள் உள்ளன. இவற்றின் விலை ரூ.100 முதல் ரூ.12 ஆயிரம் வரை உள்ளது. இது தவிர உறவினர்கள் நண்பர்க ளுக்கு பரிசளிக்கும் விதமாக கிஃப்ட் பாக்ஸ்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ரகத்துக்கு ஏற்ப ரூ.400 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை சீனப் பட்டாசுகள் எந்த கடையிலும் கிடையாது. பட்டாசு விற்பனை ஆரம்பித்த நாள் முதலே மொத்த விற்பனை நன்றாக உள்ளது. பொதுமக்கள் தற்போதுதான் பட்டாசுகளை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர்.. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x