Published : 18 Sep 2014 11:36 AM
Last Updated : 18 Sep 2014 11:36 AM
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் மைக்கேல் கிளார்க் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பில் ஹியூஸ் சேர்க்கப்பட்டுள்ளார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வே தொடரின்போது கிளார்க்கின் காலில் ஏற்பட்ட காயம், கணுக்காலிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கிளார்க் பூரண குணமடைந்துவிடுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்-ஆஸ்திரேலிய இடையிலான ஒருநாள் தொடர் அக்டோபர் 7-ம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 22 முதல் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இவ்விரு அணிகளும் ஒரேயொரு டி20 போட்டியில் (அக்டோபர் 5) மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன.