Published : 13 Sep 2014 09:57 AM
Last Updated : 13 Sep 2014 09:57 AM

அரசியல் ஆதாயத்துக்காக சமூகத்தில் பிளவு ஏற்படுத்துகிறது பாஜக: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தாக்கு

அரசியல் ஆதாயத்துக்காக உத்தரப்பிரதேசத்தில் வகுப்பு ஒற்று மையை சீர்குலைத்து மக்கள் மத்தி யில் பாஜக பிளவு ஏற்படுத்துகிறது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பிடிஐக்கு அவர் தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உத்தரப்பிரதேசத்தில், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடக்கும் இடைத்தேர்தல் மிக முக்கியமானது. மாநிலத்தில் வகுப்பு வாத சக்திகள் தலைதூக்குவதை தாங்கள் விரும்பவில்லை என்பதை காட்டும் விதமாக இந்த தேர்தலில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டும்.

மழை, இடி, மின்னல் என எது வாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாது வாக்களிக்க வரவேண்டும்.

இந்த இடைத்தேர்தலில் வகுப்பு வாத சக்திகளை தோற்கடித்தால், மக்கள் அமைதியை விரும்பு கின்றனர், வகுப்பு துவேஷத்தை விரும்பவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அரசியல் ஆதாயத்துக்காக வகுப்பு மோதலை தூண்டுகிறது பாஜக. இதை புரிந்துகொண்டு அந்த கட்சியை தோற்கடிக்கவேண்டும்.

எந்த நிலைமையையும் எதிர் கொள்ள மாநில அரசு விழிப்புடன் இருக்கிறது. வகுப்பு ஒற்றுமை சீர்குலைய அனுமதிக்க மாட்டோம். நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும் என கூறி மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பாஜக ஒன்றும் செய்யவில்லை. சொன்ன வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. விலைவாசியை குறைக்கவில்லை. பண வீக்கம் குறையவில்லை. எல்லையை பாது காக்கவில்லை. பாகிஸ்தான் எத் தனையோ முறை நமது எல்லைக் குள் ஊடுருவிய போதும் அதை தடுக்கவில்லை என்றார் முலாயம்.

மெயின்புரி மக்களவைத் தொகுதி மற்றும் சஹாரன்பூர் நகரம், பிஜ்னோர், தாகுர்வாரா, நொய்டா நிகாசன், லக்னோ கிழக்கு, ஹமீர்பூர், சர்காரி, சிராத்து, பல்ஹா, ரொஹானியா ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடக்கிறது.

ஆஸம்கர் மக்களவைத் தொகு தியை தக்கவைத்துக்கொண்டு மெயின்புரி தொகுதியிலிருந்து முலாயம் சிங் ராஜினாமா செய்த தால் அங்கு எம்.பி. பதவி காலி யானது. பாஜகவின் 9 எம்எல்ஏக் களும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் கட்சியின் ரொஹா னியா தொகுதி எம்எல்ஏவும் எம்.பி.க் களாக தேர்வானதால் 10 சட்டப் பேரவை தொகுதிகள் காலி யாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x