Published : 11 Mar 2015 09:33 am

Updated : 11 Mar 2015 09:34 am

 

Published : 11 Mar 2015 09:33 AM
Last Updated : 11 Mar 2015 09:34 AM

‘மாருதி டிஸையர்’ மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம் தனது ‘டிஸையர்’ காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய மாடல் கார்களில் மோஷன் தீம் அலாய் வீல், ரியர் காம்பினேஷன் விளக்குகள், பில்ட் இன் இண்டிகேட்டர்கள், புதிய ஸ்மோக் முகப்பு விளக்குகள், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர்கள் ஆகிய சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன. ஆல்பைன் நீலம், மெட்டாலிக் மெக்மோ சாம்பல், கேவ் கருப்பு, சங்கரியா சிவப்பு ஆகிய வித்தியாசமான வண்ணங்களில் இவை கிடைக்கும்.

மேலும் இவ்வகை கார்களில் பெட்ரோல் மாடல் 20.85 கி.மீ., டீசல் மாடல் 26.59 கி.மீ. மைலேஜ் அளிக்கும். இது இந்தியாவில் வேறு எந்த நிறுவன கார்களையும் விட மிக அதிகம்.

பெட்ரோல் மாடல் காரின் தொடக்க விலை ரூ.5.65 லட்சம், டீசல் காரின் விலை ரூ.6.81 லட்சம். கார் சோதனை ஓட்டம் செய்ய விரும்புபவர்கள் டீலர்களை அணுகலாம். இவ்வாறு மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி டிஸையர்மாடல் அறிமுகம்

You May Like

More From This Category

More From this Author