Published : 03 Mar 2015 08:28 AM
Last Updated : 03 Mar 2015 08:28 AM

மடாதிபதி நியமனத்தில் நடந்தது என்ன?- நித்யானந்தா மிரட்டி கையெழுத்து வாங்கியதாக நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் பரபரப்பு மனு

நித்யானந்தா தன்னை மிரட்டி ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், அவை ஆதீ னத்தை கட்டுப்படுத்தாது என்றும், நித்யானந்தா இப்போதும் ஆதீன மடத்தை சீரழிக்க முயற்சிப் பதாகவும் மதுரை நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பரபரப்பு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

மதுரை ஆதீன மட இளைய ஆதீனமாக நித்யானந்தா 2012-ல் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்யக்கோரி சென்னை மணிவாசகம், கும்ப கோணம் தியாகராஜன் ஆகியோர் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு முதல் முறை விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்யக்கோரி மதுரை ஆதீனம் மற்றும் நித்யானந்தா ஆகியோர் சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

அதன் பிறகு ஆதீனம், நித்யானந்தா இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்யானந்தாவை நீக்கிவிட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். பின்னர் இந்த வழக்கை தொடர்ந்து நடந்த விருப்பம் இல்லை என ஆதீனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆனால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த நித்யானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆதீனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளவழகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியை நியமனம் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. தம்பிரானாக இருப்பவரே இளைய ஆதீனமாக வரமுடியும். நித்யானந்தா மடத்தின் தம்பிரான் அல்ல, ஆதீன மடத்தின் பக்தரும் அல்ல. பிடதி ஆசி ரம தலைமை நிர்வாகியான நித்யா னந்தா என்னிடம் ஆசி பெறவும், மடத்தை தோற்றுவித்த திருஞான சம்பந்தர் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் ஆதீன மடம் வந்தார்.

அவர் படிப்படியாக சைவ சித்தாந்தத்துக்கு மாறுவதாகவும், தியான பீடத்திலிருந்து வெளி யேறுவதாகவும் உறுதியளித்தார். அவர் மடத்தில் எனது நேரடி கண்காணிப்பில் இருந்துவந்தார்.

அவருக்கு மடத்தில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மடத்தில் இருந்த நாள்களில் நித்யானந்தாவால் அவரது எண்ணம், செயல்பாடு, கொள் கைகளை மாற்றவில்லை. அவர் மடத்தில் இருந்தபோது ஆதீன மடத்தின் பெயரை கெடுக்கும் வித மாகவும், ஆதீனத்தின் தத்துவத் துக்கு எதிராகவும் செயல்பட்டார்.

அவரின் இயற்கைக்கு மாறான நடவடிக்கைகள், மடத்தை விட்டு வெளியில் தங்கியது, ஆதீ னத்தின் அனுமதியின்றி வெளியே சென்றது, தலையை மொட்டை யடிக்காதது போன்ற காரியங்களை கவனித்தேன். அவரது நடவடிக்கை ஆதீனத்துக்கு இணையாகவும், ஆதீனத்தை விட மேலானதாகவும் இருந்தது. ஆதீனத்துக்கு இணை யாக அமர ஆரம்பித்தார். அது பாரம்பரியம் கிடையாது. மேலும், அவர் தன்னை கடவுளாக கூறிக் கொண்டு மடத்தில் பூஜைகள் நடை பெறுவதை வெறுத்தார். அவர் தன்னைத்தானே 293-வது ஆதீனம் என அறிவிக்க தொடங்கினார்.

இந்த சூழலில்தான் நித்யா னந்தா மீதுள்ள பாலியல் வழக்கு கள் எனது கவனத்துக்கு வந்தன. இதையடுத்து 19.10.2012-ல் அவரை மடத்திலிருந்து வெளி யேற்றினேன்.

அவர் ஆதீனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபட்டார். அடுத்த மடாதிபதியாக நியமிக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை தயாரித்தார். அவற்றில் நான் சுயநினைவுடன் கையெழுத்திடவில்லை. திருட்டுத்தனமாக மோசடி செய்து நித்யானந்தா மிரட்டி ஆவணங் களில் என்னிடம் கையெழுத்து பெற்றார். அந்த ஆவணங்களை பல வழக்குகளில் நித்யானந்தா அவருக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டார். அந்த ஆவணங்கள் ஆதீனத்தை கட்டுப் படுத்தாதது. நித்யானந்தா ஆதீன மடத்தின் பெருமையை சீரழிக்க இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இது தொடர்பாக புகார் அளித்துள் ளேன். நித்யானந்தா முறைப்படி நியமனம் செய்யப்படவில்லை. எனவே, அவரை முறைப்படி நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டது, அவருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக இல்லை என நித்யானந் தாவும் அவரது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் விசாரணை ஏப். 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x