Published : 03 Mar 2015 15:16 pm

Updated : 03 Mar 2015 15:17 pm

 

Published : 03 Mar 2015 03:16 PM
Last Updated : 03 Mar 2015 03:17 PM

மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு செல்கிறார் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு செல்கிறார். வரும் 5-ம் தேதி பெங்களூரு செல்லும் அவர் 10 நாட்கள் தங்கியிருந்து இயற்கை வைத்தியம் மேற்கொள்ளவிருக்கிறார்.

கேஜ்ரிவாலுக்கு கடந்த சில நாட்களாக சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்சுலின் ஊசி எடுத்துக் கொண்டும் சர்க்கரை அளவு ரத்தத்தில் 300-க்கு குறையவில்லை. மேலும், இருமல் தொல்லையும் சரியாகவில்லை.

இதனையடுத்து, கேஜ்ரிவால் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு செல்கிறார். அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கேஜ்ரிவாலை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி தூசு அலர்ஜியால் ஏற்படும் இருமல் நோய்க்கு யோகா மூலம் தீர்வு காணுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால்மருத்துவ சிகிச்சைபெங்களூரு

You May Like

More From This Category

More From this Author