Published : 23 Feb 2015 09:16 PM
Last Updated : 23 Feb 2015 09:16 PM

ராம் இயக்கத்தில் மம்மூட்டி!

'தரமணி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மம்மூட்டி

வசந்த் ரவி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 'தரமணி' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராம். யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை கோபிநாத், ராம், சதீஷ்குமார் மூவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கண்காணித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

'தரமணி' படத்தை முடித்தவுடன், மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கும் தமிழ்ப் படத்தை இயக்க ராம் திட்டமிட்டு இருக்கிறார். 2010ம் ஆண்டு வெளியான 'வந்தே மாதரம்' படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி தமிழ் படங்களில் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.

தற்போது இயக்குநர் ராம் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார் மம்மூட்டி.

இப்படத்தை 'தரமணி' பணிகள் முடிந்தவுடன், 4 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். FEEL GOOD MOVIE பாணியில் இப்படத்தை எடுக்க இருக்கிறார் இயக்குநர் ராம். இப்படத்திற்கு யுவன் இசையமைக்க இருக்கிறார். மம்மூட்டி உடன் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x