Last Updated : 28 Feb, 2015 08:23 AM

 

Published : 28 Feb 2015 08:23 AM
Last Updated : 28 Feb 2015 08:23 AM

லக்னோவில் ஏ.டி.எம்-ல் பணம் நிரப்ப வந்த வங்கி ஊழியர், 2 காவலர்கள் சுட்டுக்கொலை: ரூ.50 லட்சத்துடன் கொலையாளிகள் ஓட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்-ல் பணம் நிரப்ப வந்த வங்கி ஊழியர், 2 காவலர்கள் ஏ.டி.எம்-க்கு வெளியே முகமூடி அணிந்த 2 மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து ரூ. 50 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ பல்கலைக் கழகத்துக்கு அருகே உள்ள பாபுஜங் எனும் பகுதியில் தனியார் வங்கி ஏ.எடி.எம். நிலையம் ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம்-ல் பணம் நிரப்ப அந்த வங்கியைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று வந்தனர்.

இந்நிலையில் முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் திடீரென வேகமாக அங்கு வந்தனர். அந்த மூவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்களை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டு அச் சுறுத்திவிட்டு அவர்கள் தப்பி விட்டனர்.

கொல்லப்பட்டவர்கள் அனில் சிங் (40), அருண் குமார் (45) மற்றும் அவினாஷ் ஷுக்லா (35) ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.

அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க 16 படைகள் அமைக் கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து 15 நாள் களுக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் அவர்களிட மிருந்து பணத்தை மீட்கவும் தனி கவனம் செலுத்துமாறு காவல்துறை தலைவர் ஏ.கே.ஜெயினுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x