Last Updated : 23 Dec, 2014 10:11 AM

 

Published : 23 Dec 2014 10:11 AM
Last Updated : 23 Dec 2014 10:11 AM

விவசாயி தற்கொலை எதிரொலி: போலீஸ்-கிராம மக்கள் மோதல் - துமகூருவில் பதற்றம்

விவசாயி தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அஜ்ஜ‌கொண்டன ஹள்ளி அருகே நகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்காக 40 ஏக்கர் நிலம் கடந்த 2009-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதற்காக நிலத்தின் உரிமையாளர் களுக்கு ரூ.27.56 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் விவசாயிகளுக்கு இது நாள் வரை இழப்பீடு வழங்கப் படவில்லை.

இதனிடையே நகராட்சியை கண்டித்து கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டங்களும் நடத்தினர். இந்நிலையில் அஜ்ஜ கொண்டனஹள்ளியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (31), கடந்த 20-ம் தேதி பெல்லாவி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நிலத்திற்கான இழப்பீடு வழங் கப்படாததால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என கிராம மக்கள் போராட் டத்தில் குதித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உடலை சாலையில் கிடத்தி உறவினர் களும், விவசாயிகளும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மீது மிளகாய் பொடியையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீஸார் பொது மக்கள் மீது தடியடி நடத்தினர். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் தரப்பில் 50-க்கும் மேற்பட்டோரும், போலீ ஸார் தரப்பில் 12 பேரும் காய மடைந்தனர்.

இந்நிலையில் துமகூருவில் போலீஸாரின் பேருந்து மற்றும் 3 ஜீப்களை கிராம மக்கள் நேற்று அதிகாலையில் தீ வைத்து கொளுத்தினர். அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை அடக்கம் செய்யும்படி கிராம மக்களைக் கேட்டுக்கொண்டனர். எனினும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x