Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM

என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: இன்று முதல் தொடர் போராட்டம்

என்எல்சி தொழிற்சங்கங்கள் அளித்துள்ள வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பாக புதுச் சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முத்தரப்பு சமரச பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

என்எல்சியில் 13 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின் றனர். இவர்களில் 10,638 பேரை பணி நிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை 6-ம் தேதி, பணி நிரந்தரம் தொடர்பாக 200 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிமூப்பு பட்டியலை என்எல்சி நிர்வாகம் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி தொழிற்சங்கங்கள் கடந்த 18-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தன.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் சிவராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் என்எல்சி நிர்வாகம் சார்பாக முதன்மை மேலாளர் சவுந்தர்ராஜன், கூடுதல் முதன்மை மேலாளர் திருக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். தொழி லாளர் சார்பாக அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உட்பட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். 3 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டாமல் தோல்வியில் முடிந்தது. எனவே, ஏற்கெனவே அறிவித்தபடி வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை குறித்து அதிகாரிகள் தரப்பினர் கூறும் போது, “உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி படிப்படியாக ஒப்பந்தத் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுத்தோம். ஏற்கெனவே, வேலைநிறுத்தம் செய்வது குறித்து இரண்டு முறை நோட்டீஸ் தந்துள்ளனர். எனவே, சமரச நடவடிக்கையாக முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினோம். அடுத்த கட்டமாக வரும் 2-ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தொடர் போராட்டம்

“வரும் 2-ம் தேதி நடை பெறும் சமரச பேச்சு வார்த்தையில் பங்கேற்க மாட்டோம். செவ்வாய்க்

கிழமை கருப்புப் பட்டை அணிந்து என்எல்சி முன்பு போராட்டம் நடக்கும். அதன்பிறகு, வரும் 27, 28-ம் தேதி வாயிற் கூட்டமும், 29 மற்றும் 30 தேதிகளில் கோரிக்கை அட்டை ஏந்தும் போராட்டமும் நடைபெறும். செப்டம்பர் 3-ம் தேதி நெய்வேலியில் வேலைநிறுத்தம் தொடர்பாக கூட்டம் நடக்கிறது. அதில் வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x