Published : 06 Aug 2014 08:12 AM
Last Updated : 06 Aug 2014 08:12 AM

ஆசிய பசிபிக் மாநாடு: சென்னையில் நாளை தொடக்கம் - 7 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்பு

பசியில்லா உலகம் படைப்பதில் குடும்ப விவசாய முறையின் பங்களிப்பு குறித்த ஆசிய பசிபிக் மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 7 நாடுகளின் வேளாண்மை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் அஜய் பரிடா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

மக்கள் அனைவருக்கும் தேவையான நுண்ணூட்டச் சத்துள்ள உணவுகளை வழங்கு வதற்கு குடும்ப விவசாய முறை முக்கிய பங்காற்றுகிறது.

இந்த சூழலில் குடும்ப விவசாயம் பற்றிய ஆசிய பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு சென்னையில் உள்ள எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய வேளாண்மை அமைச்சர் ராதா மோகன் சிங் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் இந்தியா, பூடான், இந்தோனேசியா, மியான்மர், மாலத்தீவு உள்பட 7 நாடுகளின் வேளாண்மை அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x