Published : 19 Aug 2014 08:31 AM
Last Updated : 19 Aug 2014 08:31 AM

தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு: 10 நிமிடங்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன

தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. பத்தே நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி பண்டிகை அக்டோபர் 22-ம் தேதி வருகிறது. வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு தீபாவளி பண் டிகையின்போது செல்வது வழக்கம்.

பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. எனினும், பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்பு கின்றனர். குறைவான பயணக் கட்டணம், சொகுசான பயணம் போன்றவையே இதற்கு காரணம்.

தீபாவளி அக்டோபர் 22-ம் தேதி புதன்கிழமை வருவதால், அதற்கு முந்தைய நாளான அக்.21-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு செல்பவர்கள், ஆகஸ்ட் 22-ம் தேதிதான் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ள ஊழியர்கள் அக்டோபர் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை வேலையை முடித்துவிட்டு அன்று இரவே செல்ல வாய்ப்பு உள்ளது..

இவர்கள் ஆக.18-ம் தேதி முன்பதிவு செய்யலாம். அதன்படி, 4 நாட்களுக்கு முன்பு ஊருக்குச் செல்ல நினைப்பவர்களுக்கு திங்கள்கிழமை முன்பதிவு தொடங் கியது. இதனால், அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங் களிலும் காலையிலேயே கூட்டம் அதிகமாக இருந்தது.

தற்போது பெரும்பாலான டிக்கெட்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படு கின்றன. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வேகம், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு நிமிடத்துக்கு 2,000 டிக்கெட் கள் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்யலாம்.

இதனால், திங்கள்கிழமை டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்தே நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்பனை ஆகி விட்டன. பெரும்பாலான பயணி கள் இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே தங்களது டிக்கெட் களை முன்பதிவு செய்துவிட்டனர். இதனால், கவுன்ட்டர்களில் நின்ற பயணிகள் மிகுந்த ஏமாற் றம் அடைந்தனர். எனவே, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில் களை ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும் என பயணி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x