Published : 12 Mar 2015 11:04 AM
Last Updated : 12 Mar 2015 11:04 AM

முடங்கி இருக்கும் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தகவல்

முடங்கி இருக்கும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மேலும் முடங்கி இருக்கும் திட்டங்களால் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்திருக்கும் நிலைமை குறித்தும் விவாதித்து வருகிறோம் என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இவ்வாறு ஜெய்ந்த் சின்ஹா தெரிவித்தார். மேலும் எந்தெந்த வழிகளில் வாராக்கடனை குறைக்க முடியும் என்பதையும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான பொரு ளாதார அறிக்கையிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. சாதகமற்ற சூழ்நிலை மற்றும் முதலீடுகள் காலதாமதமாதல் ஆகிய காரணங்களால் பல திட்டங்கள் தேங்கி இருப்பதாகவும், டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி 8.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு திட்டங்கள் முடங்கி இருப்பதாகவும் அறிக்கை தெரிவித்தது.

வங்கிகளின் வாராக்கடனை பொறுத்தவரை முதல் 10 நிறுவனங் களின் வாராக்கடன் மட்டும் 28,152 கோடி ரூபாயாக இருக்கிறது. இதனால் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 5.33 சதவீதமாக (செப் 2014 நிலவரம்) இருக்கிறது.

மின் துறையில் அதிக வாராக்கடன் இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்க பல அமைச்சகங்களுடன் சேர்ந்துதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றார்.

நிதி திரட்ட வேண்டும்

ஒரு எல்லைக்கு மேல் பொதுத் துறை வங்கிகளில் அரசு முதலீடு செய்ய முடியாது. தங்களுக்கு தேவையான நிதியை சந்தையில் இருந்து பொதுத்துறை வங்கிகள் திரட்டி கொள்ள வேண்டும் என்று நிதிச்சேவைகள் துறை செயலாளர் ஹாஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

அரசாங்கம் 20,000 கோடி முதல் 25,000 கோடி ரூபாய் வரைதான் முதலீடு செய்ய முடியும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சந்தையில் திரட்டிகொள்ள வேண்டும் என்று ஆதியா தெரிவித்தார்.

அடுத்த நிதி ஆண்டில் 7,940 கோடி ரூபாய் வரை பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யப்போவதாக பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வட்டி குறைப்பு எப்போது?

வட்டி குறைப்பு பற்றி எப்போது என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு ரிசர்வ் வங்கியின் கடன் மற் றும் நிதிக்கொள்கை ஏப்ரல் 7-ம் தேதி அறிவிக்க இருக்கிறது. அதனை பொறுத்துதான் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் இருக் கும் என்று பேங்க் ஆப் இந்தியா வின் தலைவர் வி.ஆர்.ஐயர் தெரிவித்தார்.

வங்கித்தலைவர்கள் மாநாட் டில் கலந்துகொண்டவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஏப்ரலுக்கு பிறகு 0.10 சதவீதம் முதல் 0.20 சதவீதம் வரை வட்டி குறைப்பு இருக்கலாம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x