Published : 27 Feb 2015 09:52 AM
Last Updated : 27 Feb 2015 09:52 AM

ஹே பிரபு... - ரயில்வே பட்ஜெட் சுவாரசிய துளிகள்

நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் சுரேஷ் பிரபு, ஓர் இடத்தில் தனது பெயரையே கூறி நகைச்சுவை ஏற்படுத்தினார்.

அமைச்சர் சுரேஷ்பிரபு பட்ஜெட் விவரங்களை ஒவ்வொன் றாக அறிவித்தார். அப்போது சில இடங்களில் நகைச்சுவை ததும்ப திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

* முன்பதிவு பெட்டிகளில் நடுவில் உள்ள படுக்கை பெண் கள் மற்றும் என்னைப் போன்ற வயதானவர்களுக்கு ஒதுக்கப் படும் என்று அமைச்சர் கூறியதும் சபையில் சிரிப்பொலி எழுந்தது.

* டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு விரைவு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்த சுரேஷ் பிரபு, ‘‘மேற்குவங்கத்தைச் சேர்ந்த என்னுடைய நண்பர்கள் இதன் மூலம் விரைவாகப் பயணம் செய்யலாம்’’ என்று குறிப்பிட்டார். அப்போதும் சபையில் உறுப்பினர் கள் ஆரவாரம் செய்தனர்.

* ‘நாட்டில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் சிறந்த ரயில் போக்குவரத்து சேவையை வழங்குவதுதான் எங்கள் முன்னு ரிமை. ஆனால், ஹே பிரபு (கடவுள்) எப்படி இதை சமாளிக் கப்போகிறேன் என்று தெரிய வில்லை’ என்று சுரேஷ் பிரபு குறிப்பிட்டார். பிரபு என்று கடவுளை விளிப்பது போலவும், தான் (சுரேஷ் பிரபு) இந்த சவாலை எப்படி சமாளிப்பேன் என்பது போலவும் இரண்டு பொருளில் அவர் பேசியதை உறுப்பினர்கள் ரசித்தனர்.

துளிகள்..

* ரயில்வே பட்ஜெட் வாசிக்கும்போது அமைச்சர் சுரேஷ் பிரபு சில மேற்கோள்கள், உதாரணங்கள், கருத்துகளை அவ்வப்போது கூறினார்.

* ரயில்வே துறையை மேம்படுத்துவது பிரதமர் மோடியின் கனவு. அவர் இத்துறை மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார். ரயில்வே துறைக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவத்தை அளித்த முதல் பிரதமர் மோடிதான் என்றார்.

* மிகப்பெரிய வளமும், வலிமையான அரசியலும் ரயில்வேயின் மறு பிறப்பை உறுதி செய்யும் என அவர் கூறிய போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

* சுரேஷ் பிரபு பட்ஜெட் உரையை வாசிக்கும்போது, எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் இடையூறு செய்யவில்லை. எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்திய போது மட்டும் சில எம்.பி.க்கள் “இல்லை, இல்லை” எனக் குரல் எழுப்பினர்.

* புதிய ரயில்கள் அறிவிக்கப்படாததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியடைந்தனர்.

* மூத்த குடிமக்களுக்கு, படுக்கை வசதியில் முன்னுரிமை குறித்த அறிவிப்பின்போது, நானும் மூத்த குடிமகன்தான் (61 வயது) எனக் குறிப்பிட்டார்.

* தனது உரையின்போது, “ சில புதியவை சேர்க்கப்படவும், பழைய நடைமுறைகள் நீக்கப்படவும் வேண்டும்” என்றார்.

* ரயில்வே போக்குவரத்துதான் எரிசக்தியை குறைவான அளவில் பயன்படுத்தி நிறைவான பலனைத் தருகிறது. கார்பன் டைஆக்ஸைடை குறைந்த அளவில் வெளியிட்டு காற்றுமாசுபடுவதைக் குறைக்கிறது என்றார். இதனை அவர் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைப் பார்த்தபடி கூறினார்.

* சஹ்யாத்ரி மலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் ரயில்பாதை கட்டுமானப் பணியை மையமாகக் கொண்டு சுபாதா கோகடேவால் எழுதப்பட்ட கண்டல்யாச்யா காடசாதி என்ற மராத்தி நாவல் பற்றியும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

* விடுதலைப் போராட்ட இயக்கத்தை தொடங்கு வதற்கு முன் மகாத்மா காந்தி ஒரு ரயில் பயணம் மேற்கொண்டார். மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டி யில் பயணம் செய்து, அவர் இந்தியாவை பலரும் அறியச் செய்தார். அவர் பயணம் செய்த மூன்றாம் வகுப்பு தற்போது ரயில்வே துறையில் நடைமுறை யில் இல்லை என்று சுரேஷ்பிரபு நினைவு கூர்ந்தார்.

* சுவாமி விவேகானந்தரின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் குறித்த மேற்கோளுடன் தனது உரையை சுரேஷ் பிரபு நிறைவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x