Last Updated : 14 Feb, 2015 10:45 AM

 

Published : 14 Feb 2015 10:45 AM
Last Updated : 14 Feb 2015 10:45 AM

வளர்ச்சிப் பணிகளில் `கமிஷன்’ விவகாரம்: பிஹார் முதல்வருக்குப் புது சிக்கல்

வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளும்போது, சில சமயம் எனக்கும் `கமிஷன்' கிடைக்கிறது என்று ஒரு நிகழ்ச்சியில் பிஹார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து `கமிஷன்' பெற்றதைத் தானே ஒப்புக்கொண்டதால் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறப்பட் டுள்ளது. இதனால் மாஞ்சிக்குப் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாஞ்சி, "மேம்பாலம் கட்டும் பணிகளின் செலவுகளை பொறியியலாளர்களும், தொழில் நுட்ப நிபுணர்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். அதில் ஒரு பகுதியை ஒப்பந்தக்காரர் களுக்கும் சமயங்களில் எனக்கும் வழங்குகிறார்கள்" என்று கூறி யிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பிஹார் மாநில டி.ஜி.பி.க்கு ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

அதுகுறித்து அவர் கூறும் போது, "மாஞ்சியின் மீது ஊழல் தடுப்புச் சட்டம்,1989 மற்றும் இந்திய சாட்சி சட்டம், 1872 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். லஞ்சம் பெற்றதைத் தானே ஒப்புக்கொண் டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.

இதுகுறித்து நேற்று மாஞ்சியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "முதல்வர் போன்ற உயர் பதவிகளுக்கும் கூட எப்படி லஞ்சம் வருகிறது என்பதை குறியீடாகச் சுட்டிக்காட்டவே அவ்வாறு நான் கூறினேன். மற்றபடி, நான் லஞ்சம் எதுவும் பெற்றதில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x