Published : 27 Jan 2015 09:52 AM
Last Updated : 27 Jan 2015 09:52 AM

கலவரத்தில் முஸ்லீம்களைக் காப்பாற்றிய இந்துப் பெண் தேசியக் கொடியேற்றினார்

பிஹார் மாநிலம் முஷாபர்பூரில் நடந்த மதக் கலவரத்தில் 10 முஸ்லீம்களைக் காப்பாற்றிய இந்துப் பெண்ணான ஷாயில் தேவி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார்.

பிஹார் காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஷாயில் தேவி அழைக்கப்பட்டு தேசியக் கொடியை ஏற்றுமாறு கவுரவிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மிகவும் சாதாரணமானவளான என்னை, காங்கிரஸ் கட்சி அழைத்துக் கொடியேற்ற வைத்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன்" என்றார்.

ஷாயில் தேவிக்கு புதிய வெள்ளை காட்டன் புடவையையும், சால்வையையும் பரிசாகத் தந்துள்ளனர் காங்கிரஸார்.

ஏழை இந்து விதவைப்பெண்ணான ஷாயில் தேவி 50 வயதான நிலையிலும், தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து, அவருடைய அண்டை வீட்டு முஸ்லீம்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஷாயில் தேவியின் செயல் வெளியில் வந்ததும் எல்லோராலும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x