Published : 29 Jan 2015 10:39 AM
Last Updated : 29 Jan 2015 10:39 AM

பசுமை இயக்க போராளி விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பசுமை இயக்கப் போராளி பிரியா பிள்ளை தன்னை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமைப் பிரிவு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை ஆகியவற்றுக்கு விளக்கம் கோரி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பசுமை இயக்க போராளியான பிரியா பிள்ளை கடந்த 11-ம் தேதி லண்டன் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படாமல் இறக்கிவிடப் பட்டார். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், என்னை பயணம் செய்ய அனுமதிக்காதது சட்ட விரோதமானது. லண்டனில், பிரிட்டன் எம்.பி.க்களைச் சந்திக்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது. இதனால் எனது பேச்சு மற்றும் கருத்து சுதந்திர உரிமை மட்டும் மீறப்படவில்லை; எனது கண்ணியத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் முயற்சியாகும் இது. அரசுத் துறைகள் என் மீதுள்ள பொறாமை காரணமாக, என்னை பயணிக்கவிடாமல் செய்துள்ளன. என் மீது எந்த வழக்கும் இல்லை. எனது பயணத்துக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உள்துறை அமைச்சகம், குடியுரிமைப் பிரிவு, தகவல் ஒலிபரப்புத்துறை இது தொடர்பாக வரும் பிப்ரவரி 6-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி ராஜிவ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

பிரியா பிள்ளையின் விமானப் பயணத்துக்கு அனுமதி மறுத்து அரசு சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டதாகத் தெரிகிறது.

மத்தியபிரதேசத்தில் நிலக்கரி சுரங்க திட்டங்களால் வனம் அழிக் கப்படுவது தொடர்பாக பிரியா பிள்ளை சக பசுமை இயக்கப் போராளிகளுடன் இணைந்து விழிப் புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக பேசு வதற்காகவே அவருக்கு பிரிட்டன் எம்.பி.க்கள் அழைப்பு விடுத் திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், கிரீன் பீஸ் இந்தியா இயக்கத்துக்கான ரூ.1.87 கோடி நிதியை முடக்கி வைத்துள்ளதை விடுவிக்கும் படி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x