Last Updated : 30 Jan, 2015 08:41 AM

 

Published : 30 Jan 2015 08:41 AM
Last Updated : 30 Jan 2015 08:41 AM

பொதுநல மனு: புதிய கட்டுப்பாடுகளால் வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என கருத்து

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டுப்பாடுகளால், பொது நல வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீதியரசர் கே.சந்துரு

ஏதேனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை சுயமாக அணுக முடியாத விளிம்புநிலை மனிதனுக்காக, சமூகப் பொறுப்புள்ள எந்த மனிதனும் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடித் தரலாம். இதுதான் பொது நல வழக்குகளின் பிரதான நோக்கம்.

ஒருவேளை சுயவிளம்பரமும், சுயலாபமும் தேடும் நோக்கில் யாரே னும் பொது நல மனு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தால், அவ்வாறு மனு தாக்கல் செய்தவ ருக்கு அபராதம் விதிக்க நீதிமன்றத் துக்கு அதிகாரம் உள்ளது. மேலும், தொடர்ந்து ஒருவர் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்தால், இனி அவர் மனு தாக் கல் செய்ய முடியாதபடி நீதிமன்றத் தால் தடை விதிக்க முடியும்.

ஒரு ஆதிவாசியோ அல்லது தலித் மக்களோ பாதிக்கப்படும் போது, அவர்களுக்காக யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம். எனவே, பிரச்சினை யின் தன்மையின் அடிப்படையில் தான் பொது நல மனுக்களை ஆராய வேண்டுமே தவிர, மனு வைத் தாக்கல் செய்யும் நபரின் தகுதியை ஆராயக் கூடாது.

இந்த நிலையில், பொது நல மனு தாக்கல் செய்வோர் ஆண்டு வருமான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறுவது, பொது நல வழக்கு எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்தையே சிதைத்துவிடும்.

பி.வில்சன், மூத்த வழக்கறிஞர்

பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரரின் தகுதி குறித்து நீதிமன்றத்துக்கு சந்தேகம் ஏற்படுமானால், விசா ரணையின்போது எந்த விவரத்தை யும் கேட்டுப் பெறலாம். மாறாக, மனுவைத் தாக்கல் செய்யும்போதே ஆண்டு வருமானம் பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. என்ன நோக்கத்துக்காக கேட்கப்படுகிறது என்று புரியவில்லை.

அ.அருள்மொழி, வழக்கறிஞர்

சுயவிளம்பரம் தேடும் நோக்கி லும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையிலும் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப் படுவதாகக் கூறுவதை மறுப்பதற் கில்லை. ஆனால், அத்தகைய மனுக்களைத் தடுப்பதற்காக வரு மான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்பது சரியான தீர்வாக இருக்காது. இதனால், நியாயமான கோரிக்கைகளுடன் நீதிமன்றத்துக்கு வரும் பொது நல மனுக்களின் எண்ணிக்கை குறையக்கூடும்.

ப.விஜேந்திரன், வழக்கறிஞர்

நீதிமன்றத்தை அணுகி நீதி தேட வாய்ப்பில்லாத சாமானியர்களுக்காக சமூக அக்கறையுள்ளவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பொது நல மனுக்கள் தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டது.

இதுபோன்ற பொது நல மனுக் கள் தாக்கல் செய்வதை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர் கள் பெரிதும் ஊக்கப்படுத்தினர். இந்த நிலையில், மனுதாரரின் வருமான விவரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால், பொது நல வழக்குகள் கணிசமாகத் தடுக்கப்படும். இதனால் ஏழை களும், தலித் உள்ளிட்ட சாமானிய மக்களும்தான் பாதிக்கப்படுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x