Published : 20 Jan 2015 10:35 AM
Last Updated : 20 Jan 2015 10:35 AM

மதுவெனும் ஆபத்து

‘டாஸ்மாக் சாம்ராஜ்யம்’ செய்திக் கட்டுரை, பல அதிர்ச்சியான விஷயங்களைப் பதிவுசெய்திருக்கிறது. மதுப் பழக்கத்தால் உடல்ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகள், மரணங்கள் என்று எத்தனையோ ஆபத்துகள் இருப்பது தெரிந்தும், அதை வெறும் வணிகமாக அரசு கருதுவது துரதிர்ஷ்டவசமானது. அதேசமயம், 1600 மடங்கு வருவாய் கிடைத்தாலும், டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. அரசின் வருவாயைப் பெருக்க எத்தனையோ வழிகள் உண்டு. எனவே, சமூகக் காரணங்கள், மக்களின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மது விற்பனையைக் குறைக்க அரசு முன்வர வேண்டும்.

- ஆர். குமரேசன்,வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x