Published : 25 Jan 2015 02:20 PM
Last Updated : 25 Jan 2015 02:20 PM

ஓவியம்: கற்பனைப் பிரபஞ்சம்

ராமானுஜத்துக்கு இந்த வாழ்வில் அவர் அறிந்திருந்த ஒரே பாதையாக ஓவியம் மட்டுமே இருந்துகொண்டிருந்தது. அவருடைய கனவுகள்தான் அவருடைய படைப்புலகம். கனவுலகின் விந்தைத் தன்மைதான் அவருடையப் படைப்புக் கூறுகள். அவற்றை அற்புதமாக உருவாக்கியது அவருடைய சுயமான படைப்பாக்க உத்திகளும் நுட்பங்களும். அவருடைய கலை உன்மத்தம்தான் அவருடைய கனவுலகை சிருஷ்டிப்பதற்கான சில விசேஷத் திறன்களை அவருக்குத் தந்திருக்கும். வெகுநுட்பமாக இழையூட்டியபடி நகரும் கோடுகள் மூலம் இன்றைய கிராஃபிக் பாணிக்கு நிகரான நுட்பமான வேலைப்பாடுகளைத் தன் அலாதியான விரல்கள் மூலம் அன்று அவர் சாத்தியப்படுத்திக் கொண்டிருந்தார்.

கனவுலகத்தின் மூட்டத்தைக் கொண்டுவருவதற்காக அவர் மேற்கொண்ட இன்னொரு உத்தி மிகவும் அலாதியானது. வரைவதற்கு முன் தாளை தண்ணீரில் நனைத்துவிட்டு, அதைக் காயவைத்து அது லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது வரையத் தொடங்குவார். விந்தைப் புனைவு வினோதமாய் கூடிவரும். சமயங்களில், முதலில் வரைந்துவிட்டுப் பின்னர் தண்ணீரில் லேசாக ஒற்றியெடுத்துக் காய வைப்பார். விந்தையுலகை அற்புதமாக்கும் அவருடைய வெளிப்பாடுகள் வியப்பூட்டும் தனித்துவம் கொண்டவை. கனவுலகின் ஈரப்பதமான விந்தைப் புனைவு கவித்துவமாய் கூடிவரும்.

(ஜனவரி 17-ல் சென்னை ஸ்பேஸஸ் அரங்கில் ஓவியர் ஆதிமூலம் நினைவு உரையில், ஓவியர் ராமானுஜம் குறித்து சி.மோகன் வாசித்த கட்டுரையின் சிறு பகுதி இது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x