Last Updated : 10 Jan, 2015 02:35 PM

 

Published : 10 Jan 2015 02:35 PM
Last Updated : 10 Jan 2015 02:35 PM

வாகா எல்லை தாக்குதல்: சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் வாகா எல்லையில் தாக்குதல் நடத்தி 60 பேர் பலியாக காரணமாக இருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அருகே வாகா எல்லைச் சாவடியில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 60 பேர் பலியாகினர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர்.

இருநாட்டு வீரர்களும் கொடியிறக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, அதனைப் பார்க்க வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு சதி திட்டம் தீட்டியதாக கருதப்பட்ட தீவிரவாதி ரூலா மற்றும் அவரது முக்கிய 2 கூட்டாளிகளை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் லாகூர் அருகே தாக்குதல் நடத்திக் கொன்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ரூலா சமீபத்தில் தெஹரி-இ- தலிபான் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றதாக, அந்த அமைப்பு தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x