Published : 03 Jan 2015 09:45 AM
Last Updated : 03 Jan 2015 09:45 AM

சிவகங்கையில் புத்தாண்டு தினத்தன்று பயங்கரம்: மதுபான விடுதியில் பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு

சிவகங்கையில் மதுபான விடுதி யில் புத்தாண்டு இரவில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. டைம் பாம், ரிமோட் போன்ற எலக்ட் ரானிக் பொருட்களுடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை திருவள்ளுவர் தெருவில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. இதன் அருகே அரசு மதுபானக் கடையும், மதுபான விடுதியும் (டாஸ்மாக் பார்) செயல்படுகிறது. இதை அதி முக பிரமுகர் ஒருவர் நடத்தி வருகிறார்.

ஆங்கிலப் புத்தாண்டை முன் னிட்டு பாரில் நேற்று முன்தினம் இரவு கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 10 மணிக்கு மேல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.

அப்போது அங்கு ஒரு கட்டைப் பை கேட்பாரின்றி கிடந்ததை ஊழியர் கள் பார்த்துள்ளனர். இது குறித்து சிவகங்கை நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் மலைச்சாமி, சார்பு-ஆய்வாளர் பூமி நாதன் சம்பவ இடத்துக்குச் சென்று பையைத் திறந்து பார்த்த போது, அதில் சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது.

கட்டைப் பையில் அரை அடி நீளம், 4 இஞ்ச் அகலமுள்ள இரண்டு பிவிசி பைப், சணல் மூலம் கட்டப்பட்ட வெடித்து தீப்பற்றக் கூடிய வெடிபொருட்கள், 9 வோல்ட் திறனுள்ள எட்டு பேட்டரி கள், கால் கிலோ அலுமினியப் பொருட்கள், டைம் அலாரம், எலக்ட் ரானிக் ரிமோட் சென்சார் கருவி, ரிமோட் மூலமும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெடித்துச் சிதறக் கூடிய வகையில் வெடிபொருட்கள் இருந்ததாகத் தெரிகிறது.

இத்தகவல் கிடைத்ததும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் தெரி வித்தனர். இன்ஸ்பெக்டர் குண சேகரன் தலைமையில் வந்த போலீஸார் கவச உடை அணிந்து வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.

திருவள்ளுவர் தெருவில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம், திரவுபதி அம்மன், அய்யனார் கோயில்கள் அருகருகே அமைந் துள்ளன. இத்தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இருப்பினும், மதுபான விடுதி யில் பைப் வெடிகுண்டு மூலம் அசம்பாவிதம் ஏற்படுத்த முயற்சி செய்தவர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் கூறியதாவது: கட்டைப் பையில் இருந்த வெடி பொருட்கள் பட்டாசில் பயன் படுத்தும் வெடிபொருட்கள். ஆனால், எலெக்ட்ரானிக் டிவைஸ், டைமர் பயன்படுத்தியிருப்பதால் தீவிரமாய் விசாரித்து வருகிறோம். இதை மதுரையில் நடைபெற்ற சம்ப வத்தோடு ஒப்பிட்டு விசாரிக் கிறோம். இரண்டு, மூன்று நாட் களில் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துவிடுவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x