Published : 26 Aug 2014 04:47 PM
Last Updated : 26 Aug 2014 04:47 PM

பாஜகவுக்கு ரஜினி வந்தால் வரவேற்போம்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழகத்தின் பாஜக முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் அறிவிக் கப்படுவார் என்பது கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல. அது ஊடகங்களின் செய்தி. அதேசமயம் ரஜினி பாஜகவுக்கு வந்தால் அவரை வரவேற்போம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித் துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி யில் செவ்வாய்க்கிழமை முதன் முறையாக சந்தித்தார்.

அப்போது, செய்தியா ளர்களை அவர் சந்தித்தார். ரஜினியிடம் பாஜகவில் சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர்தான் பாஜகவின் தமிழக முதல்வர் வேட்பாளர் என்பன போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,

“இது ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, அதிகாரப் பூர்வமானது அல்ல. கட்சி யிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு அல்ல. ஆனால், ரஜினிகாந்த் ஏற்கெனவே பாஜகவுக்கு நல்ல நண்பராக உள்ளார். நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வந்தபோது, ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியது இதற்கு சான்றாகும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், நதி நீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக ரஜினி உறுதியளித்தது நினைவு கூரத்தக்கது.

ரஜினியை பாஜக வுக்கு வரும்படி அன்புடன் அழைப் போம் என்று அவர் தெரிவித்தார். மேலும், 2016-ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான உத்தியை வகுக்க தேசிய தலைவரான அமித் ஷாவுக்கு அழைப்பு விடுப்போம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்கு பாஜக தீர்வு காணும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x