Published : 06 Mar 2015 10:07 am

Updated : 06 Mar 2015 10:07 am

 

Published : 06 Mar 2015 10:07 AM
Last Updated : 06 Mar 2015 10:07 AM

போர்விமானம் விபத்து: விமானி உயிர் தப்பினார்

இந்திய விமானப்படையின் ஜாகு வார் ரக போர்விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது. விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஹரியாணா மாநிலம், குரு க்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஷபத் எனும் இடத்தில் நேற்று மதியம் சுமார் 1.15 மணி அளவில் இந்த விமானம் விபத்துக்குள்ளா னது. அம்பாலா விமானப்படைத் தளத்தில் இருந்து இந்த விமானம் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து குருக்ஷேத்ரா காவல் நிலைய அதிகாரி சிமர்தீப் சிங் கூறும்போது, "வயல்வெளியில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. முதற்கட்ட தகவலின்படி, விமானம் விழுவதற்கு முன்பே, விமானி அதிலிருந்து குதித்து விட்டார். அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார்.

விமானத்தை விட்டு வெளியேறு வதற்கு முன்பு அவர் அவசர அழைப்பு விடுத்ததாகவும், விமானி தற்போது பாதுகாப்பாக இருப்பதா கவும், இந்திய விமானப்படை செய்தித்தொடர்பாளர் கூறி யுள்ளார்.

போர்விமானம் விபத்துவிமானி உயிர் தப்பினார்ஹரியாணா மாநிலம்

You May Like

More From This Category

More From this Author