Published : 19 Feb 2015 12:42 pm

Updated : 19 Feb 2015 12:43 pm

 

Published : 19 Feb 2015 12:42 PM
Last Updated : 19 Feb 2015 12:43 PM

வார ராசிபலன் 19-2-2015 முதல் 25-2-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

19-2-2015-25-2-2015

துலாம் ராசி வாசகர்களே:

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் கேதுவும் 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். வியாபார அபிவிருத்தித் திட்டங்கள் கைகூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். போட்டிகளிலும் பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வழக்கிலும் வெற்றி கிடைக்கும். மனத்துணிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பொருள் வரவு திருப்தி தரும். சொந்தத் தொழிலில் வளர்ச்சி காணலாம். 6-ல் சுக்கிரனும் 12-ல் ராகுவும் உலவுவதால் வண்டி, வாகனங்களில் செல்லும்போது விழிப்புத் தேவை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் சுமூகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். வீண்வம்பு கூடாது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 23.

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், வான் நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 7, 9.

பரிகாரம்: ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவவும்.

விருச்சிகம் ராசி வாசகர்களே:

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 9-,ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பெற்றோராலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும்.

மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். அயல் நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் முக்கியமான எண்ணம் ஒண்று ஈடேறும். எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள்.

பண நடமாட்டம் சீராகவே இருந்துவரும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால்தான் முன்னேறமுடியும். சனி ஜன்ம ராசியில் இருப்பதால் உழைப்பு அதிகரிக்கவே செய்யும். சோர்வுக்கு இடம் தராமல் கடுமையாகப் பாடுபட்டால் பயன் கூடப் பெறலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 23.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: செவ்வாய், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே:

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நிர்வாகத்திறமை கூடும். நிலபுலங்கள் லாபம் தரும்.

பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும்.

4-ல் செவ்வாயும் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. வேலையாட்களால் தொல்லைகள் சூழும். இதயம், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 23, 25.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், பச்சை, வெண்மை.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே:

உங்கள் ராசிநாதன் சனி 11-ல் இருந்து ஜன்ம ராசியைப் பார்ப்பது சிறப்பாகும். குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பொதுப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

பண நடமாட்டம் அதிகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். தர்ம சிந்தனை உண்டாகும்.

தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 2-ல் சூரியன் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். தலை, கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:பிப்ரவரி 22, 23.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே:

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். சுக்கிரனும் சாதகமாக உலவுவதால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

ஜன்ம ராசியில் சூரியனும் 2-ல் செவ்வாயும் கேதுவும் இருப்பதால் உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சில் கடுமையைக் குறைத்து இனிமையைக் கூட்டிக் கொள்வதன் மூலம் பிறரது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம்.

8-ல் ராகு இருப்பதால் பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. புதன் பலம் குறைந்து இருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. பொறுப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால்தான் முன்னேற முடியும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 23.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 6, 8

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் தரும். ஏழை மாணவர்களுக்கு உதவவும்.

மீன ராசி வாசகர்களே:

உங்கள் ராசிநாதன் குரு 5-ல் உலவுவது சிறப்பாகும். புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகமாகும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். கலைத்துறை ஊக்கம் தரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். சுப காரியங்கள் நிகழும். சூரியன், செவ்வாய், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பிறருடன் அன்புடன் பழகினால் நலம் பெறலாம். அரசுப் பணியாளர்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 23.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். நாகர் வழிபாடு அவசியம்.


ராசி பலன்வார ராசி பலன்ராசிபலன்சந்திரசேகரபாரதி

You May Like

More From This Category

More From this Author