Published : 20 Jan 2015 11:32 am

Updated : 20 Jan 2015 11:32 am

 

Published : 20 Jan 2015 11:32 AM
Last Updated : 20 Jan 2015 11:32 AM

வேலை வேண்டுமா? - பாதுகாப்புத் துறையில் பணி

பாதுகாப்புத் துறையில் பணி

இந்திய அரசின் பாதுகாப்புத் துறைகளான ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 375

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

I. National Defence Academy - 320

1. Army - 208

2. Navy - 42

3. Air Force - 70

II. Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55

வயது வரம்பு:02.07.1996 - 01.07.1999 தேதிக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்கள் கொண்ட பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100 எஸ்பிஐ அல்லது அதன் துணை வங்கிகளின் கிளைகளில் செலுத்தலாம். SC,ST பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை: உளவியல் திறனறியும் தேர்வு மற்றும் நுண்ணறிவு சோதனை, சிறப்பு தேர்வு குழுவின் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய > http://www.upsc.gov.in/exams/notifications/2015/NDA_I_2015/NDA-1%20ENGLISH.pdf> என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விஜயா வங்கியில் கிளார்க் பணி

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 8 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கிளார்க்

காலியிடங்கள்: 08

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.300. SC,ST பிரிவினருக்கு ரூ.50. இதனை பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் “Vijaya Bank, Recruitment (Sportsmen) Project, 2015” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய >http://www.vijayabank.com/UserFiles/vijayabank/file/Santhosh/Recruitment%20of%20sportspersons%202014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய சர்வே துறையில் டிரெய்னி பணி

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இந்திய சர்வே பிரிவில் காலியாக உள்ள 118 Topo Trainee Type 'A' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 118

பணி: Topo Trainee Type 'A'

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து கணிதத்துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணிதம், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் அறிவியல் பகுதிகளில் தேர்வு வினாத்தாள் அமைந்திருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

>www.surveyofindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கலில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய >www.surveyofindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வேலைஇந்திய சர்வே துறையில் டிரெய்னி பணிவிஜயா வங்கியில் கிளார்க் பணிபாதுகாப்புத் துறையில் பணி

You May Like

More From This Category

More From this Author