Published : 05 Jan 2015 14:52 pm

Updated : 05 Jan 2015 14:52 pm

 

Published : 05 Jan 2015 02:52 PM
Last Updated : 05 Jan 2015 02:52 PM

சென்னை புத்தகக் காட்சி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு

சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி மைதானத்தில் தொடங்கும் 38-வது புத்தகக் காட்சி ஜனவரி 9 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 350 பதிப்பகங்களில் இருந்து 5 லட்சம் புத்தகங்கள் காட்சியில் இடம்பெற உள்ளன. இப்புத்தகக் காட்சியில் 10 லட்சம் பார்வையாளர்கள், 20 லட்சம் வாசகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்காக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் போட்டிகளை நடத்துகிறது.

பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகளை வகுப்புவாரியாக நடத்த உள்ளது.

தி.நகர் செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேனிலைப்பள்ளியில் இந்தப் போட்டிகள் ஜனவரி 6 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, சிறுகதைப் போட்டி சென்னை ராணி மேரி கல்லூரியில் ஜனவரி 7, புதன்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை புத்தகக் காட்சிபோட்டிகள்

You May Like

More From This Category

More From this Author