Published : 30 Oct 2014 10:52 am

Updated : 30 Oct 2014 10:52 am

 

Published : 30 Oct 2014 10:52 AM
Last Updated : 30 Oct 2014 10:52 AM

தென் ஆப்பிரிக்க தொடர் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் ஹேஸில்வுட், உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலி அணியை தேர்வு செய்வதற்கான முன்னோட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறார். 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர் பிராட் ஹேடினுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. நவ.14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் முதல் இரு ஆட்டங்களும் பெர்த்தில் நடைபெறுகின்றன. 3-வது ஆட்டம் நவ.19-ம் தேதி கேன்பெராவிலும், 4-வது ஆட்டம் நவ.21-ம் தேதி மெல்போர்னிலும், 5-வது ஆட்டம் நவ.23-ம் தேதி சிட்னியிலும் நடைபெறுகின்றன.

அணி விவரம்: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஜார்ஜ் பெய்லி, நாதன் கோல்ட்டர் நீல், ஆரோன் பிஞ்ச், ஜோஸ் ஹேஸில்வுட், மிட்செல் ஜான்சன், மிட்செல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்ஒருநாள் போட்டிஆஸ்திரேலிய அணி அறிவிப்புவேகப்பந்து வீச்சாளர்ஹேஸில்வுட்

You May Like

More From This Category

More From this Author