Published : 09 Jul 2014 12:37 PM
Last Updated : 09 Jul 2014 12:37 PM

அனுமதியின்றி செயல்பட்ட தனியார் காப்பகம் மூடல்: 25 மாணவர்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு

வாலாஜாபாத் பகுதியில் அனுமதி யின்றி செயல்பட்ட தனியார் காப்பகம் மூடப்பட்டது. இதில் இருந்த 25 மாணவர்கள் அரசு காப் பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இது குறித்து தகவல் அறிந்த சமுக நலத்துறையினர் செவ்வாய்க் கிழமை அந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதியின்றி யும் அடிப்படை வசதிகளின்றியும் காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 25 மாணவர் களை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். இதுகுறித்து காப்பகத்தின் உரிமை யாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சமுகநலத்துறை அலு வலர் சற்குணம் கூறுகையில்,‘ வாலாஜாபாத் பகுதியில் ராஜா மற்றும் மலர்கொடி தம்பதியினர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 25 மாண வர்களை வைத்து காப்பகம் நடத்தி வந்தனர். மிகச்சிறிய இடத்தில் அவர்களை தங்க வைத்துள்ளனர். அங்கு நடத்திய ஆய்வில் வேலூரில் இருந்து மாணவர்களை அழைத்து வந்ததற்கும் காப்பகத்தை பதிவு செய்ததற்குமான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் மீட்கப் பட்டு காஞ்சிபுரம் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் காப்பகம் முடப்பட்டு தம்பதியரிடம் விசாரணை நடந்து வருகிறது. மீட்கப்பட்ட மாணவர் களின் பெற்றொர் நேரில் வந்து விளக்கம் அளித்தால் அவர்களுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தனியார் காப்பகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள் ளப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x