Last Updated : 23 Nov, 2014 10:30 AM

 

Published : 23 Nov 2014 10:30 AM
Last Updated : 23 Nov 2014 10:30 AM

காவிரியில் புதிய அணைகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கும்: மத்திய அமைச்சர் அனந்தகுமார் நம்பிக்கை

மத்திய அமைச்சர் அனந்த்குமார் தனது பெங்களூரு தெற்கு தொகுதியில் உள்ள‌ தெருக்களை தூய்மைப்படுத்தும் பணியில் சனிக்கிழ‌மை ஈடுபட்டார். அவருடன் நடிகை மாளவிகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட‌ பாஜகவினரும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர். அதன் பிறகு வீடுவீடாக சென்று சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு மக்களிடம் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அனந்த்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு என்ற இடத்தில் 2 புதிய அணை களைக் கட்டி 48 டிஎம்சி நீரை தேக்க கர்நாடக அரசு முடிவெடுள்ளது. இதன் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டமும், நீர்மின் நிலையமும் அமைக்க முடிவெடுத் துள்ளதை வரவேற்கிறேன்.

கர்நாடக அரசின் இந்த திட்டத்துக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது துருதிஷ்டவசமானது. தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு கர்நாடக அரசு உரிய பதில் அளிக்கும் என நம்புகிறேன்.

பிரதமர் மோடியிடம் பேசுவோம்

வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து தமிழக எம்.பி.க்கள் பிரச்சினையை எழுப்பு வார்கள் என நினைக்கிறேன். அவர்க ளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக எம்.பி.க்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா அனைத்துக்கட்சி குழுவினருடன் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும். கர்நாடகத்தின் குடிநீர் உரிமையை நிலைநாட்டுவதற்காக கர்நாட காவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரதமர், மத்திய நீர்வளம் மற்றும் வனத்துறை அமைச்சர்களை சந்தித்து பேச இருக்கிறோம்.

எனவே மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு சட்ட நிபுணர்களையும், நீர்வளத் துறை நிபுணர்களையும் உரிய முறை யில் ஆலோசிக்க வேண்டும். மேலும் காவிரியின் குறுக்கே புதிய அணை கள் கட்டுவதற்கான காரணத்தையும், அதற்கான‌ அவசியத்தையும் தெளிவாக மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும். இது பொதுமக்களின் நலனுக்காக நிறைவேற்றப்படும் கூட்டு குடிநீர் திட்டம் என்பதால் மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x