Published : 11 Oct 2014 10:40 AM
Last Updated : 11 Oct 2014 10:40 AM

ஆனந்த் கோயங்கா - இவரைத் தெரியுமா?

$ சியட் டயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2012 ஏப்ரல் முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ ஆர்.பி.ஜி. குழுமத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்காவின் மகன். 30 வயதில் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார்.

$ இதற்கு முன்பு இந் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநராக இருந்தார். நிர்வாக இயக்குநர் பராஸ் கே சவுத்திரி ஓய்வு பெற்ற பிறகு நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

$ வார்டன் கல்லூரியில் பொருளாதாரமும், கெல்லாக் நிர்வாக கல்லூரியில் எம்.பி.ஏ பட்டமும் பயின்றவர்.

$ 2007-ம் ஆண்டு படித்து முடித்தவுடன் கே.இ.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்தின் டெலிகான் பிஸினஸின் துணைத் தலைவராக சேர்ந்தார். தவிர, ஹெச்.யூ.எல்., Accenture, மார்கன் ஸ்டான்லி ஆகிய நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

$ சியட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தவிர, ஆர்.பி.ஜி குழுமத்தின் இயக்குநர் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x